Advertisment

இன்று 98 பேருக்கு 'கரோனா'!!! -தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழகசுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களை இன்றுசந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

Advertisment

தமிழகத்தில் மேலும் 98 பேருக்குகரோனாஉறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 1,075 ஆக இருந்த எண்ணிக்கை, தற்போது 1,173 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில்இருந்து 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 ஆயிரத்து 850 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 136 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 63 ஆயிரத்து 380 பேருக்கு, 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்ததுஎன்றார்.

Advertisment

tamilnadu

மேலும் பேசுகையில், இன்று ஒரே நாளில் 2,096 பேரின்கரோனா பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன, அந்த முடிவுகளில்98 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 12,746 பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இன்று கோவையில் மேலும் ஏழு பேருக்குகரோனா உறுதியானதால், இந்த எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் 10 வயதுக்கு குறைவான 31 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 9 பேருக்குகரோனாஉறுதிசெய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.திருப்பூரில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 18 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணிக்கையானது78 ஆக உள்ளது.கோவையில் மொத்தம் 126 பேருக்கும், ஈரோட்டில் 64பேருக்கும், திண்டுக்கல்லில் 56 பேருக்கும், நெல்லையில் 56 பேருக்கும் கரோனா பாதிப்பு உள்ளது. ஈரோட்டில் இன்று யாருக்கும்கரோனாதொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லைஎன்றும் கூறியுள்ளார்.

Health care Tamilnadu corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe