டில்லியில் நடைபெற்றமத மாநாட்டிற்கு சென்று வந்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரை சேர்ந்த 8 பேர்களை தனிமைப்படுத்து அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மருத்துவர்கள். அதனைத்தொடர்ந்து கரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 1ந்தேதி வாணியம்பாடி நகரின் அனைத்து பகுதிகளில் வீடுவீடாக சென்று காய்ச்சல், சளி, இரும்பல் இருப்பவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இப்பணிகளில் சுகாதாரத்துறை தூய்மைப் பணியாளர்கள், வருவாய் துறையினர் என 150க்கும் மேற்பட்டோர் 75 குழுக்களாக பிரிந்து நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதிமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக கணக்கு எடுக்க வந்துள்ளதாக தவறான தகவல் பரவியது. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி இஸ்லாமிய மக்கள் கணக்கெடுக்க வந்த அதிகாரிகளை சுற்றி வளைத்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை கணக்கெடுக்க வந்தவர்கள் நகர காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சுகாதார பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டு, பிரச்சனையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை பிடித்து ஜீப்பில் ஏற்றினர். இதனைப்பார்த்து தகராறு செய்த வேறு சிலர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடிவரும் அதேவேளையில் அழைத்து சென்றவர்களை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பிரச்சனையால் அந்த பகுதியில் கணக்கெடுப்பு பணி1 மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஏற்பட்டது. காவல்துறை வந்தபின் தற்போது தொடர்ச்சியாக அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.