Published on 16/03/2021 | Edited on 16/03/2021

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று (16.03.2021) காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். தமிழகத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 800க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, 50 நாட்களுக்குப் பிறகு, மீண்டும் 5,000-ஐ தாண்டியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.