Advertisment

ரம்ஜான் பண்டிகை தினமான இன்று (14.05.2021) இஸ்லாமியர்கள் அவர்களது இல்லங்களிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். கரோனா பாதிப்பால் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளதால், இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே தொழுகை நடத்தி கொண்டாடி மகிழ்ந்தனர். இதனையொட்டி, திருமங்கலம் பகுதியில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர் தங்களது வீட்டுக்குள்ளேயே தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி அன்பை பரிமாறிக்கொண்டனர்.