Advertisment

கரோனா பரவல்... தஞ்சையில் தனியார் பள்ளிகளுக்கு அபராதம்!

Corona spread ... fines for private schools in Tanjore!

Advertisment

கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பள்ளிகளில்கரோனாதொற்று என்பது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்உள்ள 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகளுக்குகரோனாஉறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில்பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளிஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர்ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், நான்காவதாக நேற்று முன்தினம் (18.03.2021) காலை தஞ்சையில்அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவி ஆகியோருக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும்கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

நேற்று மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதெரியவந்துள்ளது. அதேபோல் தஞ்சை சாஸ்தா பல்கலை மாணவர்கள் இரண்டு பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என மேலும் 29 பேருக்குகரோனாபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தஞ்சையில் பள்ளிக்களில்மட்டும் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட 142 பேரில் 66 பேர் குணமடைந்து விட்டனர்.பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என 76 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். தஞ்சையில் மட்டும் இதுவரை 11 பள்ளிகளில் கரோனாதொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக தஞ்சையில் இரண்டு தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் சரஸ்வதி பள்ளிக்கு 12,000 ரூபாயும், மாக்ஸ்வெல் பள்ளிக்கு 5,000 ரூபாயும்அபராதம் விதித்துள்ளார் தஞ்சை மாவட்ட ஆட்சியர்.

private school Thanjai coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe