Advertisment

மெடிக்கலால் பரவிய கரோனா... மருந்து கடைக்கு சீல்!

Corona spread by medical ... sealed drug store!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திலுள்ள சோழதரம் கிராமத்தில் சிட்டி மெடிக்கல் என்ற மருந்து கடையில் அரசு விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு ஊசி மற்றும் மருந்துகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் வழங்கப்படுவதாகவந்த தகவலின் பேரில் சார் ஆட்சியரின் அறிவுறுத்ததலில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

அதில் வீதிமுறையை மீறியது உண்மை என தெரியவந்தது. இதனால் அருகில் உள்ள கிராமத்து மக்களுக்கு Covid19 தொற்று பரவி வருகிறது என விசாரணையில் தெரியவருகிறது. மேற்கண்ட மருந்து கடையை வட்டாட்சியர் பார்வையிட்டு சீல் வைத்தார். இந்த சம்பவத்தில் சோழதரம் காவல்துறையினர், கிராம நிர்வாக அலுவலர் , வருவாய் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment

medical shops Cuddalore corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe