Advertisment

தஞ்சையில் மேலும் 2 தனியார் பள்ளிகளில் கரோனா... இதுவரை 100 மாணவர்கள் பாதிப்பு!! 

corona

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்உள்ள 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகளுக்குகரோனாஉறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில்பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளிஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர்ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், நான்காவதாக நேற்று (18.03.2021) காலை தஞ்சையில்அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவி ஆகியோருக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும்கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் இன்று மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதுதெரியவந்துள்ளது. மேலும் தஞ்சை சாஸ்தா பல்கலை மாணவர்கள் இரண்டு பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 68 மாணவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதுகரோனாபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆகஅதிகரித்துள்ளது. தஞ்சையில் இதுவரை மொத்தம் 7 பள்ளிகளில் கரோனாஉறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

school student corona virus Thanjai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe