Skip to main content

கரோனா சிறப்பு வார்டில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

Corona Special Ward Chief Stalin Interview!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

 

இந்நிலையில் தற்பொழுது சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள 850 கரோனா படுக்கைகளைக் கொண்ட மையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த 850 படுகைகளில் ஆக்சிஜன் வசதிகளுடன் 350 படுக்கைகள் தயாராக உள்ளது. இந்த 350 படுக்கைகளும் வரும் 10 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. மீதமுள்ள 500 படுக்கைகளில் ஆக்சிஜன் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த 500 படுக்கைகளும் வரும் 15 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்