Skip to main content

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு 'கரோனா'  

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
 'Corona' for Sivagangai MP Karthi Chidambaram

 

 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில்  சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு தற்பொழுது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றாலும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)

Published on 11/03/2024 | Edited on 11/03/2024

 

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இன்று (11-03-24) காலை 11:30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பங்கேற்றார். 
 

Next Story

சட்டவிரோத கருக்கலைப்பு; ஓய்வு பெற்ற பெண் செவிலியர் கைது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
illegal abortion; Retired female nurse arrested

கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவிப்பவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கையில் ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் தெரிவித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் பலையனூர் பகுதியைச் சேர்ந்தவர் காந்திமதி. இவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஆவார். கடத்த ஐந்து ஆண்டுகளாக கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை சட்டவிரோதமான முறையில் பலருக்கு தெரிவித்து வந்த காந்திமதி, இதற்காக 20,000 பெற்றுக் கொண்டு கடந்த 5 வருடங்களாக கருக்கலைப்பிலும் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இது குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மருத்துவத்துறை அதிகாரிகள் காவலர்களுடன் அங்கு சென்ற நிலையில், நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மைகள் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து கையும் களவுமாக ஓய்வுபெற்ற செவிலியர் காந்திமதியை போலீசார் கைது செய்தனர்.