தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தென்கரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 25 வயது மற்றும் 30 வயதுள்ள இரு இளைஞர்கள், சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர். கரோனா தொற்று அபாயம் உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த வாரம் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.
இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அவ்விரு இளைஞர்களும் கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினர். தகவல் அறிந்த தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோனை மேற்கொண்டனர். இதில், அவர்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.