ddd

தமிழகத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரைகரோனா நோய் தாக்கப்பட்டவர்கள் 6.50 லட்சம். மேலும்இந்நோயால் இதுவரை 10 ஆயிரம் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். ஆனால் மக்களிடம் கரோனா பற்றிய பயம் குறைந்துள்ளது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு பேருந்து போக்குவரத்து தொடக்கம், வியாபார நிறுவனங்கள், கோயில்கள் திறப்பு போன்ற பல பகுதிகளில் மக்கள், தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அதேபோல் 30 சதவித மக்கள் முகத்துக்கான மாஸ்க் போடாமல் வலம் வருகின்றனர்.

Advertisment

ddd

அரசின் கரோனா விதிகளை கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள், தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் கரோனா பரவல் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பகுதிகளில், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காத ராமன் பல் மருத்துவமனை மற்றும் வாரி கட்பீஸ் என இரண்டு தொழில் நிறுவனங்களை பூட்டினர். அதோடு அவைகளுக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் வட்டாட்சியர் பத்மநாபன்.

Advertisment

அதேபோல் முக கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டிய வாகன ஓட்டிகளை நிறுத்தி, முககவசம், கரோனாவை எந்தளவுக்கு தடுக்கும் என்பதை தனது மருத்துவ குழு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு முககவசம் வழங்கி அனுப்பிவைத்தார் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி.