Skip to main content

கரோனாவால் கோராபட்டுச் சேலைகள் தேக்கம்.... கொள்முதல் செய்ய முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கோரிக்கை!

Published on 21/07/2020 | Edited on 22/07/2020

 

dindigul district

 

கரோனா பாதிப்பால் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள கோடிக்கணக்கான மதிப்பிலான கோராபட்டுச் சேலைகளை கோ-ஆப் டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் ஆத்தூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

சின்னாளபட்டியில் கரோனா பாதிப்பால் கோடிக்கணக்கான மதிப்பிலான சுங்குடி, கோரா புடவைகள் தேக்கமடைந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்யாததால் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி சுங்குடி சேலைகளுக்கு புகழ்பெற்ற ஊராகும். சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கும் சின்னாளபட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் சுங்குடி சேலை, பட்டுச்சேலை, கோரா பட்டுச்சேலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் சின்னாளபட்டியில் அஞ்சுகம் நெசவாளர் கூட்டுறவு சங்கம், நம்நாடு, காந்திஜி, கமலாநேரு, அமரர் சஞ்சய் காந்தி, அண்ணா, சிலம்புச்செல்வர், ம.பொ.சிவஞானம் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், சித்தையன்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுமார் 2 ஆயிரம் நெசவாளர்கள் கைத்தறி கோரா பட்டு ரக சேலைகளை நெய்து வருகின்றனர்.

 

கரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் இன்று வரை (ஜீலை) முறையாக அவர்களுக்கு நெசவு நெய்வதற்கு பாவு மற்றும் நூல் வழங்காததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தவிர நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நெய்யப்படும் சேலைகளை கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்யாததால் கூட்டுறவு சங்கங்களில் கோரா பட்டுச்சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

 

இதனால் கைத்தறி நெசவாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கு கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன. இதுபோல கோரப்பட்டுச் சேலை உற்பத்தி செய்யும் தனியார் உற்பத்தியாளர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கோரா பட்டுச் சேலைகளை அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கான மதிப்பிலான கோரப்பட்டு சேலைகள் தேங்கியுள்ளன.

 

i periyasamy

 

இது போல ஆடி மாதங்களில் அம்மனுக்கு விரதம் இருக்கும் பெண்கள் மற்றும் ஓம் சக்தி வழிபாடு செய்யும் பெண்கள் சிவப்பு மஞ்சள் நிறத்துடன் வேப்பிலை படம் பிரிண்ட் செய்த சுங்குடி சேலைகளை அதிகளவில் வாங்குவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதங்களில் சுமார் 1 லட்சம் சுங்குடி சேலைகளை சுங்குடி உற்பத்தியாளர்கள் தயாரிப்பது வழக்கம்.

 

ஆனால் இம்முறை கோவில்கள் திறக்காததால் சுங்குடி சேலை உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது. சுங்குடி சேலைக்கு பிரிண்ட் செய்யும் தொழிலாளர்கள் கஞ்சி தோய்க்கும் (கஞ்சி ஏற்றும்) தொழிலாளர்கள், அயர்ன் செய்யும் தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

 

இதுகுறித்து சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், கோடை காலத்தில் தான் சுங்குடி சேலைகளை அதிகளவில் பொதுமக்கள் பயன்படு த்துவார்கள் ஆனால் தற்போது கரோனா ஊரடங்கால் யாரும் வெளியே வராத சூழ்நிலையால் சுங்குடி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன இதன்மூலம் இங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.

 

கைத்தறி கோராபட்டு ரக சேலைகளை உற்பத்தியாளர்கள் சிலர் கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, பழனி, உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து கோராபட்டு நூல்களை வாங்கி வந்து நாங்கள் இங்குள்ள நெசவாளர்களிடம் கொடுத்து சேலை உற்பத்தி செய்து அவர்களுக்கு நாங்கள் அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். தற்போது சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம் உட்பட பெரிய நகரங்களில் உள்ள ஜவுளிக்கடைகளில் வியாபாரம் இல்லாததால் அவர்கள் எங்களிடம் கொள்முதல் செய்ய வில்லை. அதனால் கோடிக்கணக்கான மதிப்பிலான கோரா பட்டுச்சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன என்றனர்.

 

                   http://onelink.to/nknapp

சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறுகையில், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யப்படும் கோரா பட்டுச் சேலைகளை மதுரை கோ ஆப்டெக்ஸ் நிர்வாகம் கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கும், மஹாராஷ்டிரா, உத்திரபிரதேச மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள் இந்தியா முழுவதும் கரோனா ஊரடங்கால் அவர்கள் (கோ- ஆப்டெக்ஸ் நிர்வாகம்) எங்களிடம் சேலைகளை (கோரா பட்டு) கொள்முதல் செய்யவில்லை. இதனால் கைத்தறி நெசவாள ர்களுக்கு கூலிப்பணம் கொடுப்பதில் கூட எங்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.


இந்த நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து ஆத்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது, சின்னாளபட்டி என்றாலே பட்டு நகரம் என்பார்கள். ஆனால் இன்று கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளை மூன்று மாதங்களாக கொள்முதல் செய்யவில்லை எனத் தெரிகிறது. அதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க தமிழக அரசு கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் கைத்தறி கோரா பட்டுச் சேலைகளைக் கொள்முதல் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற  முன்வர வேண்டும் என்று கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள் வாங்க குவிந்த மக்கள் (படங்கள்)

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை இன்று என்பதால், தீபாவளி பண்டிகைக்கான புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்க சென்னையில் புகழ்பெற்ற இடங்களான டி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் வண்ணராப்பேட்டையில் உள்ள எம் சி சாலையில், தீபாவளிக்கான புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். 

 

 

Next Story

‘நீண்ட ஆயுள் பெறலாம்.. செல்வம் செழிக்கும்..’ - அம்மனுக்கு சாத்தப்பட்ட புடவைகளை ஏலம் எடுத்த பெண்கள்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

Women who bid on sarees dedicated to Goddess 'May get long life.. Wealth will flourish..'

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று(16ம் தேதி) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

இதனிடையே ஆண்டுதோறும் அம்மன் சிரசு திருவிழாவில் சிரசு ஊர்வலம் செல்லும் பொழுது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிடுவர். அதேபோல், ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். குறிப்பாக அதிக அளவில் அம்மனுக்கு புடவை சாத்துவது வழக்கம்.

 

அதுபோல் கெங்கை அம்மன் சிரசு மீது சாத்தப்பட்ட புடவைகள் இன்று(17ம் தேதி) கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பாக ஏலம் விடப்பட்டது. அம்மன் மீது சாத்தப்பட்ட புடவைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் ஆர்வம் காட்டினர். குறைந்த விலை புடவைகளையும் அதிக விலை கொடுத்து பெண்கள் வாங்கினர்.

 

அம்மன் மீது சாத்தப்பட்ட புடவைகளை வாங்கி வீட்டில் வைத்தால் திருமண யோகம், குழந்தை பேறு மற்றும் செல்வம் செழிக்கும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதில் சுமார் 250 புடவைகள் ஏலம் விடப்பட்டது.