இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இரண்டு நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒரேநாளில், இத்தனை பேருக்கு கரோனாஉறுதியானது இதுவே முதல்முறையாகும்.
இந்நிலையில், தமிழகத்திலும் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கை 3,600 என்று உள்ள நிலையில், இன்று (07.04.2021) பிற்பகல் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜேஷ் ரஞ்சன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.