Advertisment

"ஐந்து மாவட்டங்களில் அதிகரிக்கும் கரோனா"- மருத்துவத்துறைச் செயலாளர் பேட்டி!

publive-image

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இன்று 40% அதிகரித்துள்ளது.

Advertisment

ஈரோடு கரு முட்டை விவகாரத்தில் அறிக்கைகிடைத்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கரு முட்டை விவகாரத்தில் விசாரணை குழு அறிக்கையின் படி தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரு முட்டை விற்பனை குற்றத்திற்கான அபராதத் தொகை 5 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வருகிற ஜூன் 12- ஆம் தேதி அன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. கூட்டம் கூடுவதைத் தயவு செய்து தவிர்க்க வேண்டும். மூன்று நாட்களாக சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

coronavirus pressmeet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe