Advertisment

கரோனா நிவாரணம்! அரசியலால் விழி பிதுங்கும் கட்சி விஐபிகள்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேரூராட்சி கரோனா நிவாரண அரசியலால் அரசியல் கட்சி விஐபிகள் விழி பிதுங்கி காணப்படுகின்றனர்.

Advertisment

dindigul

திமுக நகர கூட்டுறவு வங்கி தலைவர் ரிலாக்ஸ் கணேசன் கரோனா நிவாரணமாக தனது வார்டில் உள்ள 400 குடும்பங்களுக்கு 3 டன் காய்கறிகளை வீடு வீடாக சென்றுவழங்கினார். தற்போது காந்திநகர் ஒன்றாவதுவார்டு முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி, தனது வார்டை மீண்டும் தக்க வைப்பதில் மும்பரம் காட்டி வருகிறார். அதனடிப்படையில் தனது வார்டுபொதுமக்களுக்கு 3 டன் அரிசி, 5 டன் காய்கறிகளை வீடு வீடாக சென்று வழங்கினார்.

dindigul

Advertisment

இருவரும் தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பொதுமக்களிடம் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் வத்தலக்குண்டு பேரூராட்சியில் இரண்டு வார்டுகளுக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் சென்றடைந்துள்ளது. இதனால் மற்ற வார்டுபொதுமக்களிடம் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சி வி.ஐ.பி.கள் நிவாரண பொருட்கள் வழங்க ஏன் முன்வரவில்லை என எதிர்பார்க்கத்தொடங்கியுள்ளனர். இதனால் திமுக, அதிமுக என அனைத்து கட்சி வி.ஐ.பி.களும் என்னசெய்வது என்று திகைத்து வருகின்றனர். இந்த கரோனா நிவாரணம் அரசியல் கட்சி வி.ஐ.பி.களை விழிபிதுங்க வைத்துள்ளது.

corona virus politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe