தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை, கடந்த சில மாதங்களாக அதிதீவிரமாக பரவிவந்தது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதில், முக்கியமான ஒன்றாக ஊரடங்கு இருந்தது. தற்போது கரோனாவின் தாக்கம் சற்று குறைந்துவருவதால், ஊரடங்கில் தளர்வுகளைஅறிவித்துள்ளது. அதேவேளையில் தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்துவருகின்றனர். அந்தவகையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மஸ்ஜித்துகள் சார்பாக மசூதிகளில் பணிபுரியும் இமாம்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.