கரோனா பாதிப்பால் வேலையில்லாமல் அவதிப்பட்டு வரும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் மளிகை பொருட்கள் கொடுத்து உதவி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள MCC பள்ளி சார்பில் அயனாவரம் கெல்லிஸ் பகுதியில் வாழும் சுமார் இருநூறு குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன. குடும்ப பெண்களும், ஆதரவில்லாத முதியோர்களும் சமூக இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.