கொரோனா பரவுவதை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், உணவு கிடைக்காமலும் தவிக்கும் மக்களுக்கு பல்வேறு அமைப்புகள் உதவி வருகிறார்கள். அது போல் சென்னையில் ஒரு தனியார் அமைப்பு வித்தியாசமாக உதவி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள்(NGO), குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லம் ஆகிய அமைப்புகளில் சமைக்க பயன்படுத்தபடும் அத்தியாவசியமான பொருட்களான மிக்சி, கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்தால் சரி செய்ய முடியாமல் அவதிபடுபவர்களின் பழுதடைந்த பொருட்களை வாங்கிக்கொண்டு அதற்கு பதிலாக புதிய பொருட்களை கொடுத்து வித்தியாசமான முறையில் உதவி செய்து வருகிறது சென்னையை சேர்ந்த இன்சோ(INSO) என்கிற தனியார் தொண்டு நிறுவனம்.

humanity

Advertisment

இந்நிறுவனம் சார்பில் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களுக்கு இன்று காலை சுமார் 250 இலவசமாக மிக்சி, கிரைண்டர், குக்கர் போன்ற பொருட்களை வழங்கப்பட்டன. இது குறித்து பேசிய இந்நிறுவனத்தின் உரிமையாளர் வழக்கறிஞர் பிரகாஷ், "எங்கள் இன்சோ உதவும் கரங்கள் அறக்கட்டளை கடந்த 15 வருடமாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்கு சென்று சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் எங்கும் செல்லமுடியாத சூழ்நிலையில் ஆயிரம்விளக்கு தேனாம்பேட்டை பகுதியில் உள்ள பாபு தெரு, முத்தையா முதலி தெரு, எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 118 வது வார்டு முழுவதும் தண்ணீர் நிரப்பிய லாரியில் கிருமி நாசினி கலக்கப்பட்டு, அனைத்து தெருக்களிலும் எங்கள் அறக்கட்டளை சார்பில் தெளிக்கப்பட்டது.

Advertisment

humanity

இதனால் ஓரளவு கிருமி நாசினிகளை ஒழிக்க முடியும் என்பதனை செய்து வருகிறோம். மேலும் எங்கள் அறக்கட்டளை மூலம் நேரடியாக உணவுப் பொருட்கள் வழங்க முடியாத காலக்கட்டத்தில் இருப்பதால் சென்னை மாநகராட்சியின் மூலம் சமைப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் அவர்களிடம் கொடுத்து சமூக சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம்.

humanity

தற்போதுள்ள சூழலில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இன்சோ( InSO) உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் போன்ற தொண்டு நிறுவனங்களில் சமையல் செய்ய பயன்படும் இட்லி குக்கர் மற்றும் மிக்ஸி, கிரைண்டர் பழுதானால்.. இலவசமாக புதிய பொருட்களாக மாற்றி தர தயாராக உள்ளோம்... சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் எங்களுக்கு கிளைகள் உள்ளதால் யாருக்கு தேவைப்பட்டாலும் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்.

தேவை இருப்போர் 9381280808 என்ற எண்ணிற்கு அழைத்தால் மாற்று பொருட்கள் வழங்கப்படும்" என்கின்றார். இந்த பணியில் அறக்கட்டளை சமூக சேவகர்களும் கலந்துகொண்டனர்