rail

கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் ரயில்வே 'பயணிகள் ரயில் சேவை'யை நிறுத்தியது. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கி வருகிறது. கடந்த ஆண்டை விட 40 சதவீதம் சரக்கு வருவாய்க் குறைந்து இருக்கிறது. கரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் துவக்கியது.

Advertisment

அதன் ஒருபகுதியாக ஜூலை 2 ஆம் தேதி பாதுகாப்பு சம்மந்தப்படாத பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் நிரப்ப்படாமல் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கபடும் என அறிவித்தது. இதற்கு முதல்நாள், ஜூலை 1 ஆம் தேதி 224 ரயில்கள் விற்பனைக்கான ஏல அறிவிப்பை வாரியம் வெளியிட்டதைஇதனோடு சேர்த்துப் பார்க்க வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

Advertisment

இந்த உத்தரவை அடுத்து அனைத்து ரயில்வே மண்டலங்களும் பாதுகாப்பு அல்லாத பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை கணக்கெடுக்க துவங்கியது. தெற்கு ரயில்வே கணக்கெடுப்புபடி 7,192 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 50 சதவீதம் பணியிடங்கள் குறைக்கப்படுவதால் தெற்கு ரயில்வேயில் 3,596 ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் பேசியபோது, 60 ஆயிரம் ஊழியர்களை ரயில்வே குறைக்கிறது. கரோனா வருவாய் இழப்பு தற்காலிகமானது தான். இதனைக் காரணம் காட்டி நிரந்தரமாக ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கை குறைப்பது தவறான நடவடிக்கை. ரயில்கள் விற்பனைக்காக ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Advertisment

ஊழியர்கள் குறைப்பு நிர்வாகப் பணிகள் தேக்கமடைய செய்வதோடு, கடும் வேலைப்பளு ஊழியர்களை மன உளைச்சலுக்கு தள்ளும். மேலும் இளைஞர்களுக்கு ரயில்வேயில் கிடைக்க வேண்டிய 60 ஆயிரம் அரசுத்துறை வேலை வாய்ப்புகளைப் பறிக்கும். ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கும் நடவடிக்கை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும் என்றார்.