/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ih_0.jpg)
என்றைக்குமே இல்லாமல் கடந்த சில நாட்களாகவே வெளிமாநில, வெளிமாவட்ட வாசிகள் சொந்த மண் திரும்புவதால் அவர்களுடனான தொடர்புள்ளவர்கள் என்று தொற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கரோனாபாதிப்புஉயர்ந்து கொண்டே போகின்றன. அதற்கேற்ப ஒரே வாரத்தில் 8 பேர்கள் வரை மரணமடைந்துள்ளதும் சோதனை ரிப்போர்ட்கள் வரத்தாமதமாவதும், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அச்சத்திலிருக்கிறது தென்மாவட்டங்கள். மிகச் சிறிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தின் நேற்று ஒரே நாளில் 65 பேர்களுக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதால் ஆலங்குளம் நகர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு எவ்விதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கிற்குள் வந்துவிட்டது.
இந்த மாவட்டத்தின் புளியங்குடி நகரம் கடந்த 45 நாட்களுக்கு முன்பு 33 பேர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் அந்நகரின் மற்றொரு பகுதியான புளியங்குடியின் பழைய மார்க்கெட் பகுதியில் ஒரே தெருவில் 10 பேரும், அடுத்த தெருவில் கணவின் மனைவி உட்பட 28 வயது வாலிபர் என்று 13 பேருக்கு தொற்று என்றளவில் நகரில் ஒரே நாளில் 23 பேருக்குத் தொற்றானது மக்களிடையே அச்சத்தைக் கிளப்பிவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/XFZXFVXV.jpg)
மேலும் தென்காசி மரைக்காயர் பள்ளி வாசல் தெருவின் மூதாட்டி ஒருவர் காய்ச்சல் மற்றும் இதர நோய் சம்பந்தமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொற்று உறுதியானது. நேற்றிரவு அவர் மரணமடைந்தார். அவரது உடல் பாதுகாப்பாபுக் கவசங்கள் அணிந்த அரசு மற்றும் தன்னார்வலர்களால் உரிய விதிப்படி, மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் சினிமா பட இயக்குனரின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் நெல்லை சிட்டி போலீசின் ஆயுதப் படையின் ரிசர்வ் இன்ஸ்பெக்டராகப் பணியிலிருந்தவர் சாது சிதம்பரம்(54) பாளை கே.டி.சி. நகரில் குடியிருப்பவர். இவரது மருமகன் 2 வாரங்களுக்கு முன்பு தொற்றால் மரணமடைந்தார். இதனிடையே சாது சிதம்பரத்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று மரணமடைந்தார். நெல்லை மாவட்ட காவல் துறையில் தொற்று ஏற்பட்டதில் பலியான முதல் நபர் இவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ZVXC.jpg)
இவரது உடல் அரசு போலீஸ் மரியாதைப்படி எஸ்.டி.பி.ஐ. மற்றும் தன்னார்வலர்களால் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இது போன்று தென்மாவட்டங்களில் தொற்றும் மரணங்களும் உயரத் தொடங்கியுள்ளன.
இதுப்பற்றி கருத்தறிய நாம் டி.எஸ்.பி குணசேகரனை தொடர்பு கொண்டபோது, நமது லைனை எடுக்கவில்லை
.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/XVCBVC.jpg)
போளுர் டி.எஸ்.பி குணசேகரனுக்கு வேண்டப்பட்டவர்களோ, ரவி டி.எஸ்.பியிடம் பேசவேயில்லை. உயர் அதிகாரிகள் ஏதாவது கேள்வி எழுப்பினால், நான் தற்கொலை செய்துக்கொள்வேன் என மிரட்டுவார். வேலை சரியாக செய்யவில்லை என்பதாலே கேள்வி எழுப்பியபோது, சக காவலர்களிடம் போதையில் தாறுமாறாக பேசியுள்ளார். அவர் தற்கொலைக்கும் டி.எஸ்.பிக்கும் சம்மந்தமில்லை என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)