Advertisment

சென்னையில் மட்டும் 1 லட்சத்தை நெருங்கும் கரோனா... தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் உயிரிழப்பு!

corona rate in tamilnadu today

தமிழகத்தில் இரண்டாவது நாளாகஇன்று, 6 ஆயிரத்திற்கும் குறைவாக5,881 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 59,350 பேருக்குகரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்5,850 பேர் தமிழகத்தையும் மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

சென்னையில் இன்று மேலும் 1,013 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 28- ஆவது நாளாக 2 ஆயிரத்திற்கும் குறைவான அளவில்கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 99,794 என 1லட்சத்தைநெருங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று 5,778 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,83,956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் படி அரசு மருத்துவமனையில் 68 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 29 பேரும் என 97 பேர்உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிக்கப்பட்ட 50 வயதுக்குட்பட்ட 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 62 ஆவது நாளாக தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை என்பது இரட்டை இலக்கத்தைத் தொடர்ந்து வருகிறது.உயிரிழப்பு விகிதம் 1.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 2,113 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 248 பேரும், திருவள்ளூரில் 239, மதுரை 237, காஞ்சிபுரம் 111, விருதுநகர் 85, திருச்சியில் 60 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இதுவரை கரோனாவால் 1,822 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு 3,935 ஆக அதிகரித்துள்ளது. சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்திற்கும் கீழ் கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 4,868 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டையில் 359 பேருக்கும், விருதுநகரில் 357, செங்கல்பட்டு 334, கோவை 169, மதுரை 173 ,விழுப்புரம் 169, கடலூர் 158 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 485 பேருக்கும், திருவள்ளூரில் 373 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe