தமிழகத்தில் இன்று மேலும் 759பேருக்குகரோனாபாதிப்பு இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனோவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில், தமிழகத்தில் 710 பேர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 49 பேர் என மொத்தம் 759 பேருக்கு இன்று கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15,512 பேருக்குஇதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னையில் மேலும் 624 பேருக்குகரோனாபாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை9,989 ஆக அதிகரித்துள்ளது.இன்று 5 பேர் உயிரிழந்ததால்தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை103என்ற நிலையை அடைந்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 363 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 7,491 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.