தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக 6 ஆயிரத்திற்கும் குறைவாககரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில்5,822 பேர் தமிழகத்தையும் மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 58,243 பேருக்குகரோனாபரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,738 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் தமிழகத்தில் கரோனாவுக்கு 56,738 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் சென்னையில் மேலும் 1,074 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு என்பது ஒரு லட்சத்தைக் கடந்து, ஒரு லட்சத்தத்து877 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 7,010 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது1,90,966 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இதுவரை இல்லாத அளவிற்கு 99 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 77 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின்மொத்த எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கரோனாவால் 2,140 பேர் உயிரிழந்தனர். செங்கல்பட்டில் 253 பேரும், காஞ்சிபுரம் 112, திருவள்ளூரில் 246,மதுரை 247,விருதுநகர் 64, ராமநாதபுரம் 63, திருவண்ணாமலை 62,திருச்சி 60 என உயிரிழப்பு எண்ணிக்கை உள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை 1,894 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்று 5 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு உறுதியானது. இன்று மட்டும் 4,805 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் மூன்றாவது நாளாக 5 ஆயிரத்திற்கு குறைவானபாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தேனியில் 377 பேருக்கும்,விருதுநகரில் 286 பேருக்கும்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தூத்துக்குடியில் 243,திருவண்ணாமலையில் 242,கன்னியாகுமரியில் 198,தென்காசியில் 178,தஞ்சையில் 167, காஞ்சிபுரத்தில்368, திருவள்ளூரில்305, செங்கல்பட்டில்314,கோவையில் 236,திருச்சியில் 138 மற்றும்புதுக்கோட்டையில் 91 பேர் எனக் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.