/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adsds_40.jpg)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,756 பேருக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்1,261 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரைகரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 1,25,350 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளது. அதேபோல் சென்னையில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 72,500 ஆகஉள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,051 பேர் குணமடைந்துடிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர்எண்ணிக்கை 74,167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திற்கு சிகிச்சை பெறுவதைவிட குணமடைந்தோர்எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 64 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 21 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பில்லாத5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு1,700 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 39 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
சேலத்தில் இன்று 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் மொத்த பாதிப்பு 1,412 ஆக அதிகரித்துள்ளது.872 பேர்குணமடைந்த நிலையில், 886 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விழுப்புரத்தில் இன்று 105 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,338 அதிகரித்துள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரியில் 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் 231 அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 335 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5,009 ஆக அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,392 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 271 பேர் இருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு5,476 ஆக அதிகரித்துள்ளது. 3,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,704 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,181 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று 100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,325 அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்குஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,967 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,495 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)