corona rate in tamilnadu

Advertisment

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 817 பேருக்குகரோனாபாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தைதாண்டியிருக்கிறது.அதேபோல் சென்னையில் கரோனாவால்இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் 18,545பேருக்கு இதுவரை கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 678பேர்தமிழகத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பதும்தெரியவந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று558 பேருக்குஒரே நாளில்கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 136பேருக்கு இன்று கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 5 பேருக்கும், விழுப்புரத்தில் 5பேருக்கும், திருநெல்வேலியில் 4 பேருக்கும், கன்னியாகுமரி, திண்டுக்கல்லில் தலாஒருவருக்கும்எனமகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்களுக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 12,203 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இன்று 11,731 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 567 நபர்கள் குணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.மேலும் 6 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133உயர்ந்திருப்பதாகவும், அதேபோல் தமிழகத்தில் 9,909 பேர் இதுவரை மொத்தம் குணமடைந்துள்ளனர் எனவும்சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.