Corona at a private school in Kumbakonam ...

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்உள்ள 460 மாணவிகளுக்கும் கடந்த 11ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.03.2021) முதற்கட்டமாக20 மாணவிகளுக்குகரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர். அன்றே இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில், மேலும் 36 மாணவிகளுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 56 ஆக உயர்ந்து அங்கு பரபரப்பைக் கூட்டியது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டது.

Advertisment

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில்பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளிஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர்ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், நான்காவதாக இன்று (18.03.2021) காலை தஞ்சையில்அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் இதுவரை மொத்தம் 5 பள்ளிகளில் கரோனாஉறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.