/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1111 highcourt_15.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கையில் உள்ளவர்களைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாக கைது செய்யப்பட்டவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களைத் தடுத்ததுடன், அவர்களை ஜாதியைக் குறிப்பிட்டு திட்டியதாக, குடிமங்கலம் கிராமத்தின் வி.ஏ.ஒ. கொடுத்த புகாரின் பேரில், போலீசார் கடந்த மாதம் கார்த்திகேயனைக் கைது செய்தனர்.
ஜாமீன் கோரி கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை, திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கோவையில் தங்கியிருந்து அங்குள்ள சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தினமும் காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
Follow Us