Skip to main content

கரோனா தடுப்பு நடவடிக்கை... சனிபகவான் கோயிலுக்குப் பூட்டு

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் திருநள்ளார் சனீஸ்வரபகவானின் கதவையும் பூட்டவைத்துவிட்டது. வரும் 31ம் தேதி வரைபக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என்று அறிவித்து மூட உத்தரவிட்டிருக்கிறார் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை உறையவைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தமிழகம் , காரைக்காலையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கரோனா அதிவேகமாகப் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறுகட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குத் தடைவிதித்து வருகிறது.

 

 Corona Prevention ... Lock to Sanipakavan Temple


அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பனீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற நளன் குளத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடுவதைக் கட்டுபடுத்த முடியவில்லை என அதனைத் தடுக்கும் வகையில் கடந்த வாரம் குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் அங்காங்கு பள்ளங்களில் கிடக்கும் தண்ணீரை பாட்டில்களில் அள்ளி பக்தர்கள் புனித நீராடுவதை நிறுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து,நோய்த் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு கோயில் மூடப்பட்டிருக்கிறது.
 

இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில்," காரைக்கால் திருநள்ளார் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருவதால் அச்சம் பக்தர்களிடையே உள்ளது. இதன் இந்த நிலையில் புதுச்சேரி முதல்வரின் பரிந்துரையின் பேரில் கோயில் நடை 31ம் தேதி வரை மூடப்படுகிறது. அதேசமயம் தினசரி கோவிலில் பூஜைகள் தடையின்றி நடைபெறும். கோவில் நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வருகிற 31 ம் தேதி வரை பக்தர்கள் யாரும் கோவிலை நாடி வரவேண்டாம்," எனக் கூறியிருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.