Skip to main content

"கரோனா பாசிட்டிவ், ஆனால் நலமாக இருக்கிறேன்....!" -கம்யூனிஸ்ட் தலைவர் சி.மகேந்திரன் தகவல்!

Published on 29/08/2020 | Edited on 30/08/2020

 

 "Corona is positive but I am fine ....!" - Communist leader C.Mahendran Information


சாமான்ய மனிதன் முதல் அறிவாற்றல் ஆளுமை மிக்க மனிதர்கள் வரை யாருடைய முகவரியையும் ஆழ்ந்து பார்க்காமல் ஊடுருவும் கொடிய ஆயுதமான கரோனா வைரஸ் தனது நீள் கரத்தை மேலும் மேலும் நீட்டி எல்லோரையும் பதைபதைக்க வைக்கிறது. எதற்கும் அஞ்சாத பல அரசியல் தலைவர்களையும் அவர்கள் இருப்பிடத்திலேயே முடங்க வைத்துவிட்டது அப்படி பாதுகாப்பாக இருந்தும் பலர் கரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி, சிலர் மரணமுற்றும் பலர் சிகிச்சை பெற்று குணமாகியும் வருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியரும், எழுத்தாளருமான சி.மகேந்திரனுக்கு 29 ஆம் தேதி நடைபெற்ற பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுக்க கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், தொண்டர்கள், முற்போக்கு இலக்கியவாதிகள், தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு இச்செய்தி அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 "Corona is positive but I am fine ....!" - Communist leader C.Mahendran Information

 

சிகிச்சையில் உள்ள சி.மகேந்திரன் நம்மிடம்,


"லேசாக காய்ச்சல் இருந்தது, உடல் வலியும் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அது கரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதால் உடனே அட்மிட்டானேன். இது ஆரம்ப நிலைதான். சளி தொந்தரவு முழுமையாக இல்லை, காய்ச்சலும் குறைந்து வருகிறது. நலமாக இருப்பதை உணர்கிறேன்" என்றவர், வழக்கமான அரசியல் பேச்சுக்கு வந்தார் "இந்த கரோனா கூட நம்மிடம் கருணை காட்டும் ஆனால் எளிய மக்களை மேலும் மேலும் துன்பத்தில் தள்ளுகிறது இந்த ஆட்சியாளர்களின் சர்வாதிகார நடவடிக்கைகள். வழக்கமான வாழ்வியல் நடைமுறைகளையே புரட்டிப் போட்டுவிட்டது. இப்போதுள்ள அரசியல் செயல்பாடுகளை கம்யூனிஸ்ட்டுகள் கூர்மையாக, அதே சமயம் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய தருணம் இது. மின்னணு வாக்குப்பதிவு, மற்றும் அதன் மிகப் பெரிய மோசடித்தனம் பற்றி ஒரு நாவலாக எழுதத் தொடங்கியுள்ளேன் தோழர்.." என உற்சாகமாக பேசினார். விரைவில் நலம் பெற்று மக்கள் பணியாற்ற வாருங்கள் தோழர் என நலம் பெற வாழ்த்துகளை கூறினோம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன்” - மகேந்திரன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
mahendran movie press meet

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. இதில் சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் மகேந்திரன் பேசியதாவது, “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கணும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது, “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான் இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். ஜி.எம். சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷூட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார்” என்றார்.

Next Story

மாஜி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மறைவு! 

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Former communist MLA S. Rajasekaran passed away

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிறைந்திருந்த குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராஜசேகரன். கீரமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போது கிராமங்கள் தோறும் நடக்கும் கம்யூனிஸ்ட் மக்கள் நலப் போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களைப் பார்த்து இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஜமீன் ஒழிப்பு போராட்டம், தொழிலாளர் நலப் போராட்டங்களில் பங்கேற்றவர். பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டார். அதேபோல படிப்படியாக கட்சிப் பதவிகளிலும் முன்னேறினார்.

2001ம் ஆண்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டாலும் அடுத்து 2006ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

2011ல் சட்டமன்ற உறுப்பினர் காலம் முடிந்த பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.