நாடு முழுவதும் கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களானதூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள்ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், திரைபிரபலங்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.