கரோனா மற்றும் ஒமிக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இதனால், கேரளா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுவருகிறது. வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை சில புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
வருகின்ற ஜனவரி ஐந்தாம் தேதி புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிற நிலையில், தற்பொழுது பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.