சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்குச் செல்ல முயன்ற கரோனா பாதித்த நபர் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏர் இந்தியா விமான மூலம் அந்தமானுக்குச் செல்ல இருந்த பயணிகளின் கரோனா சான்றிதழை விமான நிறுவன ஊழியர்கள் பரிசோதித்து அனுப்பினர். அப்போது சலாம் என்ற பயணியின் சான்றிதழைப் பார்த்தபோது அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் தனி ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பயணிகள் புறப்பாடு பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.