தமிழகத்தில் கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 7இருந்த நிலையில், தற்போது மேலும் இருவருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதனால் தமிழகத்தில் கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கலிபோர்னியா மற்றும் துபாயில் இருந்து தமிழகம் வந்த இரண்டு பேருக்கும்கரோனாஇருப்பது உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் இருந்து வந்தவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதேபோல் துபாயில் இருந்து வந்தவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.