Advertisment

“கிட்ட கிட்ட நின்னா... நானும் வருவேன் ஒன்னா...” தரை ஓவியத்தில் மிரட்டும் கரோனா..! (படங்கள்)

தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ள நிலையில், மக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க அரசு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகளைஏற்படுத்திவருகிறது.

Advertisment

தமிழக காவல்துறையினர், ஊரடங்கு உத்தரவை மீறி அநாவசியமாக வெளியில் வருவோரை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்துவருகின்றனர். இப்போது தற்காலிக காய்கறி சந்தையாக மாற்றப்பட்டுள்ள சென்னை, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில், வில்லிவாக்கம் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தில் சமூக இடைவெளியை வலியுறுத்தும் வகையில் “கிட்ட கிட்ட நின்னா, நானும் வருவேன் ஒன்னா” என கரோனா வைரஸ் கூறுவது மாதிரியான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

Painting corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe