தமிழகத்தில் மேலும் 526 பேருக்குநேற்றுகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது. தற்பொழுது திருவள்ளூரில் ஒரே நாளில் 200 பேருக்குகரோனாஇருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்சென்னைக்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி13ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலமாக இந்த ஆலோசனை கூட்டமானது வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்டங்களில் நிலவும் சூழ்நிலைகள் என்ன?, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கரோனானது அதிகரித்து வரும் நிலையில்தளர்வுகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.