Advertisment

மற்ற மாவட்டங்களிலும் கரோனா!!! கரூர் நகராட்சியில் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு...

corona

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களிலும் கரோனாபாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக இன்று ஒரே நாளில் 2,396 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 32,186 பேருக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில் இந்த எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 1,254 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனாஉறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக இதுவரைகரோனாஉறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது 56,845 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் இன்று 130 பேருக்கும், மதுரையில் 80 பேருக்கும் ஒரே நாளில்கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில்ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனாபாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடைகள் இயங்குவதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் நகராட்சி பகுதியில் ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் இயங்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Chennai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe