சென்னையை தவிர பிறமாவட்டங்களில் கரோனாவின் நிலை!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட பாதிப்பு!! 

 Corona in other areas other than Chennai

தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்தமுழு பொதுமுடக்கம் மேலும் 7 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாகமதுரையில் இன்று மட்டும் 280 பேருக்குகரோனாஉறுதியாகி உள்ளது. இதனால் மதுரையில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,703 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் மதுரையில் கரோனாவால்இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 169 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 106 பேர் இதுவரை கரோனாவால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். 3,313 பேர் குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 127 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4500 ஐநெருங்கி வருகிறது. மேலும் திருவள்ளூரில் இதுவரை 82 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 125 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,268 அதிகரித்துள்ளது.அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட பரிசோதனையில்இன்று 74 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 719 ஆக அதிகரித்துள்ளது.கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் இன்று 49 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாகவே கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 65 பேருக்குகரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. தற்போது வரை தேனி மாவட்டத்தில் 992பேருக்குகரோனாகண்டறியப்பட்டுள்ளது. 753 பேர் சிகிச்சையில் உள்ளனர். 234 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கரோனாவிற்கு தேனியில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் முதல் முறையாக 100க்கும் அதிகமானோருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் அங்கு 106 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 807 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில், சென்னையில் தொடர்ந்து கரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்குஒரே நாளில் இன்று 2,400க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு உச்சத்தை தொட்டுள்ளது.

Chennai corona virus madurai Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe