ADVERTISEMENT

கரோனா நடவடிக்கைகள்... ஆக்சிஜனை கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் !

10:32 PM Apr 28, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை கண்காணிக்க தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கரோனா பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமாகி வரும் நிலையில், நாடு முழுவதும் ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கைகள் ஆகியவை பற்றாக்குறையும் தட்டுப்பாடும் ஏற்பட்டிருப்பதால் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் அவலம் தமிழகத்திலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைளில் கவனம் செலுத்தி வருகிறது தமிழக அரசு.

இந்தநிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைகளை கண்காணிக்கவும் அது தொடர்பான பிரச்சனைகளை சரிபார்க்கவும் அனாமிகாரமேஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்திருக்கிறது தமிழக அரசு. அதேபோல, அத்யாவசிய மருந்துகளின் கையிருப்பை கண்காணிக்க கெளரவ்குமார் ஐ.ஏ.எஸ். அதிகாரியையும், மருத்துவமனைகளில் படுக்கைகளின் இருப்பினை கண்காணிக்க ஐஸ்வர்யா மற்றும் கட்டாரவிதேஜா ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT