Advertisment

'கரோனா' இரண்டாம் அலை இல்லை... ஆனால் சவாலாக இருக்கும்! - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி! 

 'Corona' is not a second wave ... but it will be a challenge ... - Minister Vijayabaskar interview!

Advertisment

சென்னைராஜீவ் காந்தி மருத்துவமனையில் தமிழகசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,

தமிழகத்தில் கரோனாவிலிருந்து குணாமடைந்தோர் விகிதம் என்பது 94 சதவிகிதமாக உள்ளது. தனியார் மருத்துவமனைகள் கைவிட்டநோயாளிகளுக்கும் ராஜீவ் காந்திமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சர்வதேசத் தரத்திலானசிகிச்சையால் 26,762 பேர் இது வரை கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.தற்பொழுது இணைநோய்கள் உள்ள கரோனாநோயாளிகளுக்கு 1,500 படுக்கைகளுடன் கூடியசிகிச்சைவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குளிர் காலத்தில், கரோனாநோய்ப் பரவல் தடுப்புப் பணிமற்றும் சிகிச்சை என்பதுசுகாதாரத்துறைக்கு மிகப்பெரியசவாலாகஇருக்கும். உலகம் முழுவதும் கரோனாஇரண்டாம்அலை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இரண்டாம் அலை இல்லை.அதேபோல்தொற்று பாதிப்பு அதிகரிப்பும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக பண்டிகைகள்,நிவர் புயல் பாதிப்பு, குளிர்காலம்உள்ளிட்ட காரணங்களால்,கரோனாதடுப்பு பணி என்பதுசவாலாக உள்ளது.இருந்தபோதிலும் சுகாதாரத்துறை தொடர்ந்துகரோனாதடுப்புப் பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறதுஎன்றார்.

Chennai vijaybaskar corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe