Advertisment

''கரோனா இன்னும் ஒழியவில்லை...''- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரோனா இன்னும் ஒழியவில்லை, தனிமனித இடைவெளி கேள்விக்குறியாக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசுகையில், ''கரோனா இன்னும் நம்மை விட்டு முடியவில்லை. தமிழகத்தில் இன்று கூட 1,956 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகும். சென்னையை பொறுத்தவரை இன்று ஒரே நாளில் 187பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியள்ளது. எனவே தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்'' என்றார். மேலும், கடந்த 3 நாட்களில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 25,156 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.

Advertisment

Ma Subramanian Tamilnadu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe