No buses in Kanyakumari tomorrow

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது ஐந்தாம் கட்ட ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.ஜூன் 30ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தைதமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இன்று தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,149 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,333 என அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நாளை பேருந்துகள் இயக்கப்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.பேருந்துகள் இயக்கப்படுவதுகுறித்து நாளை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.