
கரோனா வைரஸ் தொற்று குறித்தான வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா எனும் கொடிய வைரஸ் தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து கிடக்கிறது. வைரஸ் குறித்து நெட்டிசன்கள் வழக்கம்போல் வலைத்தளங்களில் கிண்டல் கேளிக்கைகளோடு வதந்திகளையும் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் நாகை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அல்லது பொதுத் தளங்களில் வதந்தி பரப்பிவந்தவர் மீது நாகை மாவட்ட காவல்துறை சார்பில் 13 வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மாவட்ட காவல்கண்கானிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இனிவரும் காலங்களில் பொதுமக்கள் அச்சம் கொள்ளும் வகையில் கரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அல்லது பொதுத் தளங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போன்று வெளிமாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குறிப்பாக சென்னை போன்ற பகுதியில் இருந்து இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய நபர்கள் குறித்தான விபரங்களை 1077 எண்ணில் தொடர்புகொண்டு தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)