மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு கரோனா...

Jawahirullah

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவு நாள் ஒருபுறம் நெருங்கிவரும் நிலையில், மறுபுறம் தமிழகத்தில் கரோனாபாதிப்பு என்பது தொடர்ந்து மீண்டும்அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகள் சார்ந்த பரப்புரை கூட்டத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ளாததால், கரோனாஅதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகிவரும்நிலையில், சில கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதியில் போட்டியிடும்மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு தற்பொழுது கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

M. H. Jawahirullah mmk tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe