'Corona' in Madurai ;lockdown be extended for 7 days

மதுரையில் ஏற்கனவே நாளை இரவு வரை அமல்படுத்தப்பட்டிருந்த முழுமுடக்கம்மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மதுரையில் இன்று மட்டும் 280 பேருக்குகரோனாஉறுதியாகி உள்ளது. இதனால் மதுரையில் மொத்தம் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,703 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் மதுரையில் கரோனாவால்இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் ஜூலை6 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்த முழுமுடக்கம், ஜூலை12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்தீவிரமாக கண்காணிக்கப்படும், எவ்வித நடவடிக்கைகளுக்கும்அனுமதி கிடையாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதைஉள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் எனமுதல்வர் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி எல்லை,பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு,திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு முடக்கம் இருக்கும்.முடக்க காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம்கண்டிப்பாக அணியவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment