corona lockdown - TN Govt - Highcourt

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ரவிதாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளது. ஒரு குடும்பத்தைசமாளிக்க 1000 ரூபாய் போதுமானதாக இல்லை. தமிழக அரசு அறிவித்த நிவாரண தொகை அமைப்புசாரா தொழிலாளர்கள் பலருக்கு இன்னும் போய்ச் சேரவில்லை. கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டபோது, ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. பொங்கல் திருவிழாவின்போதுகூட ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

Advertisment

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஜப்பான் 20 சதவீதமும் அமெரிக்க 15 சதவீதமும் நிவாரணமாக வழங்குகிறது. ஆனால், இந்தியாவில், ஜிடிபியில் ஒரு சதவீதத்தை மட்டுமே வழங்கியுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு நீடித்துக் கொண்டிருக்ககூடிய வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத்கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், ஏற்கனவே தமிழக அரசு ஊரடங்குகாலத்தில் போதிய நிவாரண உதவிகளை வழங்கி உள்ளது. இதுபோன்ற வழக்குகள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்று வாதிட்டார்.

Advertisment

இந்த வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.