ADVERTISEMENT

மீண்டும் கரோனா ஊரடங்கா?-தமிழக முதல்வர் நாளை ஆலோசனை!

10:36 AM Apr 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் மீண்டும் கரோனா பாதிப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் வரும் 27-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் தமிழகத்திலும் சற்று கரோனா பாதிப்பு முன்பைவிட அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். மருத்துவத்துறை செயலாளரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பெருமளவில் போடப்பட்டிருக்கும் நிலையில் இரண்டாவது டோஸ் மட்டுமே கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் செலுத்தாத நிலை உள்ளது. எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் கரோனா ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் இருக்க வாய்ப்பில்லை என்றே மருத்துவத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ஆம் தேதி பிரதமருடனான ஆலோசனைக்கு தேவையான புள்ளி விவரங்களை தயாரிப்பதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்க இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT