தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மேலும் 56 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_281.jpg)
மேலும் ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில்குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியீட்டுள்ளது. அதில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்க ரூ.184.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)