தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தற்பொழுது கரோனா பாதிப்புகள் எண்ணிக்கை சற்று குறைந்து தமிழகத்தில் பதிவாகியுள்ளது. வழக்கத்தைவிட சென்னையிலும் இன்று மூவாயிரத்திற்கும் கீழ் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாவட்டங்களில் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கரோனா ஒருநாள் தோற்று எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அந்த மூன்று மாவட்டங்களுக்கு கரோனா தடுப்பு பணிகளுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திற்கு செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திற்கு சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.