Advertisment

தேனியில் 'கொரோனா ஆய்வகம்'- மத்திய அரசு அனுமதி 

இந்தியாவில்கொரோனாவைரஸால்மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 34 ஆக இருந்தநிலையில்தற்பொழுது கொரோனாவைரஸால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

Corona Laboratory in Theni

இந்நிலையில் ஓமனில் இருந்து இந்தியா வந்ததமிழர் ஒருவருக்குகோரோனாவைரஸ்பாதிப்பு இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அதேபோல்ஈரானில் இருந்து லடாக்வந்தஇருவருக்கும் கொரோனாவைரஸ்தொற்று இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேர்உடல்நிலையும் தற்பொழுது வரை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில், கொரோனாஉறுதியானதை அடுத்து ஓமனில் இருந்து இந்தியா வந்த 45 வயதுடைய அந்த நபருக்கு சென்னை ராஜீவ்காந்திஅரசு மருத்துவமனையில் மேற்கொண்டு சிகிச்சை அளித்து வருகிறோம். கோரோனோபாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். கொரோனவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக சுகாதாரத் துறை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் தேனியில்கொரோனாபரிசோதனை கூடம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிண்டியில் கிங் ஆய்வகம் அமைக்கப்பட்ட நிலையில்,தற்பொழுது கூடுதலாக தேனியில்கொரோனாசோதனை ஆய்வகம்அமைக்க மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Theni hospital corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe