ADVERTISEMENT

குமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி!

10:40 PM Oct 22, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளா் ராதாகிருஷ்ணன் கூறியுள்ள நிலையில் குமாி மாவட்டத்தில் தினமும் குறைந்தது 30 போ் கரோனாவால் பாதிக்கபட்டுள்ளனா் என்று மாவட்ட நிா்வாகமும் தொிவித்து வருகிறது.

இந்தநிலையில் குமாி மாவட்ட வருவாய்துறை அதிகாாியாக இருக்கும் ரேவதி அனைத்து தரப்பு மக்களிடமும் நெருக்கமாக பழக கூடியவா். கரோனா காலத்திலும் மக்கள் அல்லல்படும் அடிப்படை வசதிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கும் சக ஊழியா்களுடன் மக்களோடு மக்களாக நெருக்கம் காட்டியவா். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக டி.ஆர்.ஒ ரேவதிக்கு உடல்நிலை பாதிக்க பட்டியிருந்ததால் மருத்துவ பாிசோதனையில் அவருக்கு இன்று (22-ம் தேதி) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டி.ஆா்.ஒ ரேவதி ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனால் கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். ஏனென்றால் கலெக்டா் அலுவலகத்தில் தொடா்ந்து நடந்த மீட்டிங்கில் டி.ஆா்.ஓ ரேவதி கலந்து கொண்டுள்ளாா். அதேபோல் அனைத்துதுறை அதிகாாிகளுடன் தனியாகவும் ஆலோசனைகள் நடத்தியுள்ளாா்.

தமிழக அரசு பதிவு மற்றும் பத்திரதுறை தலைவரும் குமாி மாவட்ட கண்காணிப்பாளருமான ஜோதி நிா்மலா சில தினங்களுக்கு முன் கலெக்டா் அலுவலகத்தில் பருவ மழை தொடங்க இருப்பது சம்மந்தமான ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாாிகளும் கலந்து கொண்டாா். அப்போது அந்த கூட்டத்திலும் டி.ஆா்.ஒ கலந்து கொண்டதால் அனைவரும் அதிா்ச்சியில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT